VG Business School

cropped-vgbiz-1.png

Feed Back

மிகவும் அற்புதமாக எல்லாவித கேள்விகளுக்கும் சிறப்பான பதில் அளித்தனர். அருமையான வரவேற்பு, உணவு, உபசரிப்பு, நமது வேட்டுவக் கவுண்டர் சமுதாய உறவுகள், நமது உறவுகளை எப்படி வாழ்வில் முன்னேற்றிச் செல்வது என… அருமையான இயற்கைச் சூழலில் தங்கும் விடுதி, உறவுகளுடன் அளவளாவியது என சிறப்பான பயிற்சி ..
பி. கோபால்
ஸ்டார் இன்ஜினியரிங்.- அவிநாசி.
+91 88837 77788
Thanks to VG Business Tycoons, Really I Spend my two days with very informative knowledge gathering meeting. Enjoyed a lot & Helped me to identify my mistakes & rectified to get better solution, How to utilise the resources properly, Excellent food Arrangements & Accommodation.
Saranya. S
GENCAD, HOSUR.
நல்ல முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இப் பயிற்சி முற்றிலும் தொழில் முனைவோர்களுக்கு உண்டானதாக இருந்தாலும், புதியதாக தொழில் முனைவோராக வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவதாக இருந்தது என்பதில் மிக்க மகிழ்ச்சி. இப் பயிற்சியில் கலந்து கொண்டது மனதிற்கும், மூளைக்கும், புத்துணர்ச்சி அளிப்பதாக இருந்தது. இது போன்ற பயிற்சிகள் வருடத்திற்கு 2, 3 முறை இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி ..வணக்கம்...
Dr. K. R. சோமசுந்தரம். M.D
ஓசூர்
மிகவும் அருமை, ரூபாய் 30,000/- மதிப்புள்ள இந்த கருத்தரங்கம் வெறும் 3,000/- ரூபாயில் நிகழ்த்தியது மிகவும் நல்ல முயற்சி. மொத்தத்தில் 10 மடங்கு லாபம் பார்த்த பிசினஸ் இது தான்.
வி. சிவ இளங்கோ
இன்சூரன்ஸ் பேக்ட்ரீ, கோயம்புத்தூர்.
இப்பயிற்சியின் மூலம் நான் நமது வேட்டுவக் கவுண்டர் சமூக உறவுகள் பலரிடம் உரையாட வாய்ப்பு கிடைத்தது. இதற்கு உறுதுணையாக இருந்த ( VG Business Tycoons ) சிறப்பு ஏற்பாடு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இப் பயிற்சி மேலும் நம் அனைத்து உறவுகளுக்கும் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். மேலும் நாம் ஏற்கனவே உரையாடியது போல் மகளிர்க்கு மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற வழி வகை செய்ய வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.
எஸ். ஷாந்தகுமார்
SHREE SHAKTHI INDUSTRRIES
The Training was very wonderful to improve my business. It was useful for my new business platform. It was vey valuable time spent and also to manage money was an important role. During the Training more than business was able to interact with my relatives who were unknown to me for so many years. Its great opportunity for my new business in E commerce platform to know about who are the supplier and manufacturer of the products that I will be registering for my platform … Great opportunity
J.Jaikumar
JK Associates, Coonoor
எங்கள் தொழிலிற்கு தேவையான பயிற்சிகள் நமது சொந்தங்களுடன் எந்த ஒரு தடைகளும் இன்றி எனது முழு மனதுடன் கற்றுக் கொண்டேன். புதிய சொந்தங்கள் வி.ஜி.பிசினஸ் டைக்கூன்ஸ் சந்தித்தது மகிழ்ச்சி. ஓசூர். டாக்டர். வாழை பரமேஸ்வரன், வடிவேல், சிவ இளங்கோ அவர்கள் இந்தப் பயிற்சிக்கு எடுத்துக் கொண்ட விடா முயற்சிகள் சொல்ல முடியாத நன்றி பெருக்குகள், உணர்வுகள்... HATS OF YOU DEAR…
கே. சுந்தர்ராஜ்
தரணி ஹெர்பல்ஸ்
இந்தப் பயிற்சியில் நான் மட்டும் தான் தனிமை ஆக போராடுகிறேன் என்று நினைத்தேன். நமக்கு பல நண்பர்கள், உறவினர்கள் சப்போர்ட் ஆக இருக்கிறார்கள். பெரிய பெரிய ஆட்கள் இருக்கிறார்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி. எனது (AIM) கண்டிப்பாக நிறைவேறும். எனது லட்சியம் சாதாரணமாக இருக்காது.. என்பதில் மகிழ்ச்சி தமிழகம் தாண்டியும் இந்த (Business) செல்லும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அதற்கு உறவுகள் உதவியாக இருப்பார்கள் என மனதார நம்புகிறேன்.
ம. மகேஸ்வரன்
அபிஸ்ரீ நியூ ஜென் மார்க்கெட்
இந்த பயிற்சியில் நான் யார்..? நான் என்ன செய்கிறேன் ..? என்ன செய்ய வேண்டும், என்ன என்ன தவறு செய்கிறேன், தொழிலில் என்னுடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்பது பற்றி தெளிவாகத் தெரிந்து கொண்டேன் , மேலும் எனது இலக்கை முடிவெடுக்கும் வித்தையை கற்றுக் கொண்டேன், இந்த பயிற்சிக்கு திரு . ரமேஷ் அவர்களின் உந்துதல் காரணமாகவே வேறு வழி சொல்ல முடியாமல் கலந்து கொண்டேன், இல்லையெனில் நிறைய கற்றுக் கொள்ளாமல் வேலை செய்து கொண்டிருப்பேன் , இனி எனது இலக்கை இலகுவாக எளிதில் அடைவேன் நன்றி வி.ஜி. பிசினஸ் டைக்கூன்ஸ். ...
கே. ஈஸ்வரமூர்த்தி
அனிச்சம் அசோசியேட்ஸ். கோவை
நீண்ட நாட்களாக அனைத்து இருந்த விளக்கு (என்னை) பற்ற வைக்கும் நெருப்பாக மட்டும் இல்லாமல் நமது வி.ஜி. டைக்கூன்ஸ் அமைப்பு எண்ணை ஊற்றி திரியை தூண்டி விடும் அமைப்பாக இருப்பது நானும் வெற்றி பெற்று நமது சமூகத்தில் அனைவரையும் வெற்றி பெற செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது, கே. வி. ரமேஷ் அண்ணா, டாக்டர். வாழை பரமேஸ்வரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.. நிறைய வழிகாட்டுதல்கள் தேவை .. என்றும் அன்புடன் ...
தயாநிதி
வீ. நிதியகம், ஓசூர்
வி.ஜி. பிசினஸ் டைக்கூன்ஸ் நடத்திய டைக்கூன் இன்சைட் 1.0 பயிற்சியில் நேரம் தவறாமை மற்றும் வணிக விளையாட்டுகளுடன் கூடிய பயிற்சி மிகவும் அற்புதம். பயிற்சியாளர்கள் மிக அழகாக எளிதில் புரியும் தன்மையுடன் பயிற்சி கொடுத்தனர். என் மகிழ்ச்சியை எப்படி சொல்வது.. மீண்டும் இது போன்ற பயிற்சிகள் புது புது விஷயங்களுடன் தேவை...
என். கோபால்சாமி
JSV GARMENTS, புஞ்சைப் புளியம்பட்டி
It was very nice workshop, the arrangements have been Excellent, the commitment shown by the organizer, trainer, and the participants extra ordinary, we got to meet really nice peoples hear about their drive to create valuable business and grow. This defiantly has become one unique experience…
Yuvaraja
வி ஜி. டைக்கூன்ஸ் பயிற்சி நமது வேட்டுவக் கவுண்டர் சமுதாய வணிக ஒற்றுமையையும், தொழில் முனைவோர் அனைவரையும் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்த விதம், நம் உறவுகளுடன் ஒன்றாக இருந்து வெளிப்படையாக நமது தொழிலில் உள்ள பிரச்சினைகள் மற்றும் தற்போதைய நிலையைப் பற்றியும் தெரிந்து கொண்டோம், இதன் மூலம் நமக்கு ஒரு விழிப்புணர்வு மற்றும் தெளிவும் கிடைத்தது, மொத்தத்தில் இந்த இரண்டு நாட்கள் மறக்க முடியாத நாட்கள் .. நன்றி .. வி.ஜி.டைக்கூன்ஸ் ..
ரா. வடிவேல்
ICON WRISTEKK- WATCH STRAPS,, ஓசூர்
நான் என்னுடைய இலக்கு (Goal) இது தான் என்பதை இந்த 2 நாட்களில் தெளிவாக உணர்ந்தேன், நல்ல நிலையில் உள்ள நமது வணிக உறவுகளின் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இது போன்ற நிகழ்ச்சிகளை 6 மாதத்திற்கு ஒரு முறை நடத்த என்னுடைய கோரிக்கை...
கே. பாலசுப்பிரமணி.
கணபதி டெக்ஸ்டைல்ஸ், ஈரோடு
I have learned a lot about overall business running new capability, by this training what are all I missed in my office , I will implement immediately. Mr. Ramesh Training Method educated many things where I do mistake in my business … “Proud to attend this Tycoon Inside- 1.0 Meet”
A. Balaji
GENCAD, Hosur
பயிற்சியாளர்கள் தன்னம்பிக்கை பேச்சு அவர்தம் திறமைகள் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது, இது தான் வணிகம், இப்படித் தான் தொழில் செய்ய வேண்டும், என்பது மிக அழகாக தெளிவாகப் புரிந்தது. இன்னும் வணிகத்தில் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது.. மிக்க மகிழ்ச்சி நன்றி ..
திருமதி பூர்ணிமா கோபால்
ஸ்டார் இன்ஜினியரிங் - அலகு 2. மேட்டுப்பாளையம்
மொத்தத்தில் நான் யார்...? என் வேட்டுவக் கவுண்டர் சமூகத்தில் என் சமுதாய மக்களை பார்ப்பதற்கு ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு, ரமேஷ் சார் வகுப்பு எடுத்த விதம் மிக நன்று. எனக்கு இருக்கும் பல ஆசைகளில் இப்பொழுது மேலும் மகுடம் சேர்க்கும் வகையில் எனது வணிகத்தில் மேம்பாடு அடைவேன் என நம்புகிறேன், நன்றி வணக்கம் .
டி. நிஷாந்த் திருப்பூர்
கணபதி டெக்ஸ்டைல்ஸ், ஈரோடு
எனக்காக எனது வணிகத்திற்கு உதவும் / அவர்களுக்கு நான் உதவவும் மேலும் 50 உறவுகளை உருவாக்கி கொடுத்தமைக்கு நன்றி. என் ஆழ் மனதில் இருந்த பல சந்தேகங்கள் இன்று தீர்த்து வைக்கப் பட்டது. இனி என் வணிகத்தில் நான் தெளிவுடன் புதிய பாதையில் புதிய உத்வேகத்துடன், புதிய சிந்தனையுடன் செயல்பட உதவியாக இருக்கும். கால தாமதத்தினால் 50 % பயிற்சி மட்டுமே பெற்றுக் கொண்டேன் அதற்கே இவ்வளவு என்றால் முழுமையாக கலந்து கொண்டிருந்தால் ... ? மிக்க நன்றி
எம். கோவிந்தராஜ்
வுட் ஜோன், கவுந்தப்பாடி
மிகவும் அற்புதமான டைக்கூன் இன்சைட் 1.0 பயிற்சி பற்றி நிறைய சொல்ல வேண்டும், இரண்டு நாட்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை, பயிற்சியில் கற்றதை வணிகத்தில் கடைபிடித்து இனி எனது பணியில் நிறைய மாற்றங்கள் செய்வேன், எனது வணிக வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் நன்றி ..
எஸ்.கமலவேணி
நிதி ஆலோசகர், இன்சூரன்ஸ் பேக்டரி, கோவை
Known Where I am in business though this workshop, I learnt many things, like time management, Team Work, Leadership and Organizing Works .. Thanks to Tycoon Inside 1.0 … Thanks to VG Business Tycoons.
DR. Saravanan
Shivani Collections
Good Start, Good Arrangements , Organising works was awesome , Wonderful Training Session, Food Was Very Amazing, T Shirt Was Very Impressive, Very Very Great Efforts, K. V. Ramesh , Dr. Valai Parameshwaran and the Team hats of You, Next Time Sure I am part of the Team., Miles to go…
Balachader
Entech, KARUR.
தொழில் செய்பவருக்கு எவ்வாறு செய்தால் வாழ்க்கை முன்னேற்றம் அடைவது.. நமது பணியாளர்களை எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என அறிந்து கொண்டேன்…
பி. தனுஷ் குமார்.
கணபதி டெக்ஸ்டைல்ஸ் , ஈரோடு
நான் பயிற்சிக்கு வரும்போது ஒரு குழப்பமான நிலையில் தான் வந்தேன், ஆனால் இந்த இரண்டு நாள் பயிற்சி எனக்கு நான் யார்.? என்ன செய்ய வேண்டும்…? என்பதை எனக்கு உணர்த்தியது … அற்புதமான ஒரு பயிற்சி, இந்தப் பயிற்சி எனக்கு மட்டுமல்ல…, என்னைப் போன்ற நம் எண்ணற்ற உறவுகளுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும், இதற்கு வி.ஜி. பிசினஸ் டைக்கூன்ஸ் க்கு தான் முதல் நன்றி ...
பெயர் குறிப்பிடாமால் பின்னூட்டம் எழுதிய டைக்கூன் இன்சைட் 1.0 பங்கேற்பாளர்
பயிற்சி வழங்கிய விதம் மிகவும் அருமை. நேரம் போனதே தெரியவில்லை. 2 நாள் பயிற்சியில் கற்றுக் கொண்டவை ஏராளம். நான் இதுதான் முதலில் கலந்து கொண்ட பயிற்சி வகுப்பு. மைக்கில் பேசியது மறக்க முடியாது....
நரேந்திரகுமார்
R K KUMAR JEWELLERY
இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இந்த பயிற்சி மூலம் கிடைத்தது , இந்த வணிக மேம்பாட்டுப் பயிற்சி எனக்கு முதல் முறை வாய்ப்பு, இன்னும் பல பயிற்சி வகுப்புகள் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன், வணிகத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் .. நன்றி,
திருமதி. கவிதா வாழை பரமேஸ்வரன்
Hosur
வாழ்வில் நாம் எப்படி வாழ்வது என்று தெரியாத இருந்த எனக்கு ( VG Business Tycoons ) மூலமாக இவ்வளவு அனுபவம் மட்டும் இல்லாமல் அதிக விஷயங்கள் கற்றுக் கொண்டேன். அது மட்டும் இல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து இருந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
பி. நித்தியானந்தன்
ELECTRONICS, EDAPPADI.
இது போன்ற தொழில் சார்ந்த பயிற்சி மற்றும் சமுதாய முன்னேற்றம் முன்னெடுத்து நமது வேட்டுவக் கவுண்டர் சமுதாய மக்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு இது ஒரு மிகச் சிறந்த பயிற்சி முகாம் ஆகும். திரு கே. வி. இரமேஷ் ஐயா அவர்களின் முயற்சி மற்றும் சொற்பொழிவு, அணுகுமுறை, உபதேசம், அவர்களின் வாழ்க்கை அனுபவம் இங்கு வந்துள்ள அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் . நன்றி
கே. ஞானசேகரன்
விவசாயம். வேட்டுவப்பட்டி, எடப்பாடி.
டைக்கூன் இன்சைட் போன்ற பயிற்சிப் பட்டறைகள் நமது வேட்டுவக் கவுண்டர் சமுதாயத்திற்கு கிடைத்த பெருமை.. மிக அற்புதமான பயிற்சி முகாம், நமது வேட்டுவக் கவுண்டர் வணிக உறவுகளுக்கு வணிகத்தில் புதிய உத்திகளை அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது. நன்றி...
மோகன்ராயன்
Erochem’f
பயிற்சியாளரின் பயிற்சி நடத்தும் முறை கண்டு வியந்து விட்டேன். களைப்போ, சலிப்போ, இல்லாமல் ஒரு பயிற்சி முகாமை கண்டதில்லை நான் உறங்கும்போது அதிகாலை 1.30 மணி. நமது வேட்டுவக் கவுண்டர் சமுதாய முன்னேற்றத்திற்கு இது போன்ற பயிற்சிகள் அணைத்து வணிகம் செய்வோரும் பங்கு பெற வேண்டும்... பயிற்சிக்குப் பின் எனது மனம் நிறைவாக இருந்தது உபசரிப்பு, உண்வு, தங்கும் விடுதி, பரிசுகள், மிகச் சிறந்த ஏற்பாடுகள். எல்லாமே மிக அருமை ...
ஆர். பாலசுப்பிரமணியன்,
கவுந்தப்பாடி
நான் எவ்வாறு தொழில் செய்கிறேன் என்பதையும், இனி எவ்வாறு தொழில் செய்ய வேண்டும் என்பதையும் இரண்டே நாளில் மிகத் தெளிவாக விளக்கிய பயிற்சி முகாம். இந்த 2 நாள் ஜாலியாகப் போனதே தெரியாமல் மிக அருமை. இனி எனது வணிகத்தில் வெகுவிரைவில் முன்னேற்றம். நன்றி...
பி. தர்மராஜ்,
RAINBOW IMAGES – GOBI
ஒரு குழுவாக இணைந்து எவ்வாறு பணி செய்வது என்பதைக் கற்றுக் கொண்டு, எனது பலவீனத்தைச் சரி செய்யும் முறையைக் கண்டறிந்த பயிற்சி... இதுவரை எனது குறைகளை காணாமல் இருந்துள்ளேன் எனத் தெரிந்து சரி செய்தது... எனக்குள் ஒரு நம்பிக்கை கிடைத்துள்ளது ... நமது வேட்டுவக் கவுண்டர் வணிக உறவுகளுடன் இணைந்து எனது வணிகமும் மேம்படும் என்று...
பி. வனிதாமணி
ஸ்ரீ ஆதவ் வித்யாலயா
வியப்பளிக்கும் பேச்சாற்றல், விசித்திரமான குறிப்புகள், வித்தியாசமான வணிக விளையாட்டுகள், வணிகம் இப்படித்தான் செய்ய வேண்டுமென எனை மாற்றிய பயிற்சி, நான் நிறைய பயிற்சிக்கு சென்றிருக்கிறேன் ஆனால் நமது வி.ஜி.பிசினஸ் டைக்கூன்ஸ் பயிற்சி போல கண்டதில்லை, இனி எனது வாழ்க்கையை மாற்றப்போகும் பயிற்சி .. திரு கே. வி. இரமேஷ் அவர்களுக்கு நன்றி…
ஆர். விஜயக்குமார்
மிதுனா ஏஜென்சீஸ் கொடுமுடி
நமது வேட்டுவக் கவுண்டர் வணிக உறவுகளை ஒரே இடத்தில சந்தித்தது மகிழ்வானது... தொழில் செய்யும் சூட்சுமத்தை விளையாட்டாய் கற்றுக் கொண்டது... தொழில் செய்ய மிகப் பெரிய கல்வி எல்லாம் தேவையில்லை ... அனுபவம் போதுமானது எனப் புரிந்து கொண்டேன் ... வணிகத்தில் ஒவ்வொரு செயலையும் எவ்வாறு செய்வதென்பதை அழகாகக் கற்றுக்கொன்டேன், இப்பயிற்சி எனது வணிகத்தையம் / புதிதாகத் துவங்க உள்ள வணிகத்தையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல டைக்கூன் இன்சைட் உந்துதலாக இருக்கும் நன்றி
ஆர். கண்ணன்
சங்ககிரி
வேட்டுவக் கவுண்டர் வணிக மேம்பாட்டு அமைப்பு டைக்கூன் இன்சைட் பயிற்சி எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது... என்னால் முடிந்தவரை நிறைய உறவுகளை நமது அமைப்பில் இணைப்பேன் ..
எஸ். விஸ்வநாதன்
VSR BUILDERS
டைக்கூன் இன்சைட் பயிற்சி முகாம் ஏற்பாடுகள் மிகவும் தரம் வாய்ந்தவை. ஒரு சாதனைப் பயணத்திற்கான முதல் முயற்சி... நேர்த்தியான, தெளிவான நோக்கம், பயிற்சி மற்றும் பயிற்சியாளர் ஒருங்கிணைத்த விதம் உலகத்த தரம், ஏற்பாட்டாளர்களின் அணுகுமுறை, அன்பு, அக்கறை நமது சமுதாய உறவுகளுக்கு வாழ்த்துக்கள். இச்சீரிய முயற்சி வெற்றியடையும், இது எனது பெருமை, நமது வேட்டுவக் கவுண்டருக்குப் பெருமை.
சே.தியாகராஜ்
ஏற்றுமதியாளர், கோபிசெட்டிபாளையம்
நமது வேட்டுவக் கவுண்டர் சமுதாய பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு வந்துள்ளேன் ஆனால் இது போன்ற ஒரு அற்புதமான பயிற்சி வகுப்பை இதற்கு முன் கண்டதில்லை. நமது சமுதாய உறவுகளில் வணிகம் செய்வோர் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய பயிற்சி... மிகவும் பயன் உள்ளதாகவும், சிறப்பாகவும் அமைந்தது நன்றி . வி.ஜி.டைக்கூன்ஸ் ஆல் எனக்குப் பெருமை .. என்னால் வி.ஜி டைக்கூன்ஸ் க்கும் பெருமை… நன்றி
ஏ. ஜி. ரவி
கரூர்
பயிற்சியை மிகச் சிறப்பான முறையில் திரு. கே.வி.இரமேஷ் அவர்கள் நடத்தினார். விளையாட்டாக இருந்தாலும் அதிலும் வியாபார நுட்பங்களை எளிதாக புரிய வைத்த விதம் மிக அருமை நேரம் தவறாமையைக் கற்றுக் கொண்டேன் . உணவு, உபசரிப்பு மிகச் சிறப்பு .. வந்திருந்த நமது வேட்டுவக் கவுண்டர் சமுதாய இளைஞர்கள் நடந்து கொண்ட விதம் என்னை மிகவும் ஈர்த்தது ...
எஸ். ராமசாமி
வின்னர்ஸ் இன்ஜினியரிங், கோவை
நமது வேட்டுவ கவுண்டர் சமுதாயம் சிறப்பாக துளிர்த்து இருந்தது கண்டு ரசித்தேன்... சிதறிக்கிடந்த சிங்கங்களை ஒன்றாக சந்தித்து அளவளாவியது ... இந்த டைக்கூன் இன்சைட் பயிற்சி மிகவும் சிறப்பாக இருந்தது... சரியான நேரத்தில் சரியாக நடந்தது கண்டு மிகவும் மகிழ்ந்தேன்... நமது சமுதாயம் மேலும் சிறப்படைய கட்டமைத்த உறவுகளுக்கு நன்றி ... நம்மை மென்மேலும் உயர வைக்காமல் விடமாட்டார்கள் என்பதை கண்டு வியந்தேன்... வி.ஜி பிசினஸ் டைக்கூன்ஸ் நமது வேட்டுவக்கவுண்டர் சமூகத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று நன்றி வாழ்த்துக்கள்
கோ. கணேசன்
AUDITOR
டைக்கூன் இன்சைட் கலந்து கொண்ட நமது வேட்டுவக் கவுண்டர் சொந்தங்களின் வணிக அனுபவங்கள் மெய் சிலிர்க்க வைத்தது. விளையாட்டாய் வியாபாரத்தை கற்றேன் .. அருமை இது போன்ற பயிற்சிகள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொருவரும் பங்கு பெரும் வகையில் நடத்துங்கள் நன்றி ..
யுவராஜ்
SRI VENKATESWARA AUTO COATINGS
பயிற்சிக்கு உள்ளே : சொல்ல வேண்டிய விஷயம் முக்கியம் என்றாலும் அது எந்த விதத்தில் சொன்னால் மனதில் எளிதில் சென்றடையும் என்பதில் பயிற்சியாளரும் பயிற்சி ஏற்பாட்டாளர்கள் மிக அருமையாக வடிவமைத்து இருந்தனர்.. பயிற்சிக்கு வெளியே : இது நமது வேட்டுவக்கவுண்டர் அமைப்பு ஏற்பாடு செய்தது தானா..? என என்னையே கிள்ளிப் பார்க்கும்படி வைத்து விட்டீர்கள்... அனைத்து அம்சங்களும் மிகவும் அருமை... அருமையானதொரு ஆரம்பம்... தொடரட்டும் உங்கள் பணி... வெல்லட்டும் வேட்டுவர்படை...
க. ஸ்ரீ . மணிவண்ணன்
GSM MECHATRONICS
அருமை வேட்டுவக் கவுண்டர் வணிக சொந்தங்களைச் சந்தித்து கூடி உறவாடியது மனம் மகிழ்ச்சியான தருணம். இதில் நான் உணர்ந்த விஷயம் ஒவொருவருடைய சாதனைகள், தொழில் ரீதியான ஆரம்ப கால சூழ்நிலைகள் அதிலிருந்து எப்படி உயர்த்த நிலைக்கு வந்தது என உரையாடியது மெய் சிலிர்க்க வைத்தது அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.. வி.ஜி. பிசினஸ் டைக்கூன்ஸ் அமைப்பின் இந்த டைக்கூன் இன்சைட் பயிற்சி வகுப்பு நமது வேட்டுவக் கவுண்டர் சமுதாயத்தை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை .. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ..
தண்டபாணி
காவேரி டெக்ட்ரானிக்ஸ்
பயிற்சியின் வரவேற்பு அட்டகாசம் ... மற்றும் இயற்கை சார்ந்த இடத்தில் பயிற்சி முகாம் அமைந்தது அதை விட அட்டகாசம் ... பயிற்சி வகுப்பில் நடந்த விளையாட்டுடன் கூடிய பயிற்சி முறை மிகவும் பாராட்டுக்குரியது... மிகத் திறமையான அனுபவம் வாய்ந்த பயிற்றுநரின் அறிவுரை மற்றும் செயல் விளக்கம் மிகவும் அருமை... எவ்வாறு தொழிலில் மேலும் மேம்பட வேண்டும் என்று கூறிய வழிமுறை சிறப்பு... எனது வணிகத்தில் / அலுவலகத்தில் நடந்த குறையை மிக அழகாக எடுத்துக் காட்டிய விதம் மிகவும் சிறப்பு ... மொத்தத்தில் இதுவரை நான் கலந்துகொண்ட பயிற்சி வகுப்பில் இவ்வாறு எனது சுய ஆய்வு மற்றும் தொழில் பற்றிய ஆய்வை நான் செய்யவில்லை... இது மிகவும் அற்புதம் எனது தொழிலில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என அறிந்துகொள்ள இப்பயிற்சி எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது நன்றி வாழ்க வளமுடன்
ே. மகேஸ்வரன்
YUVA AUTOMATION
பயிற்சி என்பதற்காக ஒருவர் மட்டுமே பேச மற்றவர்கள் கவனித்து செல்லும் வகையில் இல்லாமல் அனைவரும் முன் வந்து பங்கேற்று பேசி மகிழ்ந்தது... புதிய புதிய யுக்திகளை நம்மை அறியாமல் நமக்குள் விதைத்தனர் பயிற்சியாளர்கள் ... நமது வேட்டுவக்கவுண்டர் சமுதாயத்தில் இவ்வளவு திறமையான கடுமையாக உழைக்கும் தொழில்முனைவோர்கள் கண்டு வியந்தேன் ...அவர்கள் என்னிடம் நண்பர்கள் போல் பழகியது மிகவும் பிடித்தது...நமது உறவுகள் நான் எண்ணியதை விட மிகவும் திறமையானவர்களாக இருந்தனர்... பயிற்சி சிறப்பாக நடந்தது... இது ஒரு ஆரம்பம் தான் என்பது மகிழ்ச்சி... புதிய முயற்சி எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது விஜி பிசினஸ் டைக்கூன்ஸ் சர்வதேச அளவில் நமது சமுதாயத்தை எடுத்துச் செல்லும் பல ஆயிரம் / இலட்சம் செலவு செய்து கற்கவேண்டிய விஷயத்தை சொற்பமான சில ஆயிரம் செலவில் கற்றுக் கொள்ள வைத்தது நன்றி
மருத்துவர் ஸ்ரீராம்
கவுந்தப்பாடி
விளையாட்டு முறையில் நமது வியாபாரம் இப்படித்தான் என்று எளிதாகப் புரியும் முறையில் உங்களது பயிற்சிகள் ஆழ்மனதில் பதிவாகியுள்ளது மிக்க நன்றி ... எங்களது பலம், பலவீனம் என்ன என்பதையும் பலவீனத்தை எவ்வாறு குறைப்பது என்பதையும் பலத்தை எவ்வாறு அதிகப்படுத்துவது என்பதையும் எடுத்துரைத்த திரு கே.வி. இரமேஷ் அவர்களுக்கு நன்றி... பயிற்சிக்கு வரச் சொன்னதிலிருந்து காலை உணவு வழங்கி வரவேற்று உபசரித்து. இரண்டு நாள் நேரம் போனதே தெரியாமல் சிறப்பாக உபசரித்தது மேலும் அறுசுவை உணவு மிகவும் அருமை... அதனைவிட கே. வி. இரமேஷ் அவர்களின் அணுகுமுறை பயிற்சி அளித்த விதம் அனைத்தும் எங்களது குடும்பத்தில் ஒருவராக இருந்தது அருமை ... இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி
எஸ் பி இலக்குமணன்
சாய்ராம், ஈரோடு
பயிற்சியின் வரவேற்பு அட்டகாசம் ... மற்றும் இயற்கை சார்ந்த இடத்தில் பயிற்சி முகாம் அமைந்தது அதை விட அட்டகாசம் ... பயிற்சி வகுப்பில் நடந்த விளையாட்டுடன் கூடிய பயிற்சி முறை மிகவும் பாராட்டுக்குரியது... மிகத் திறமையான அனுபவம் வாய்ந்த பயிற்றுநரின் அறிவுரை மற்றும் செயல் விளக்கம் மிகவும் அருமை... எவ்வாறு தொழிலில் மேலும் மேம்பட வேண்டும் என்று கூறிய வழிமுறை சிறப்பு... எனது வணிகத்தில் / அலுவலகத்தில் நடந்த குறையை மிக அழகாக எடுத்துக் காட்டிய விதம் மிகவும் சிறப்பு ... மொத்தத்தில் இதுவரை நான் கலந்துகொண்ட பயிற்சி வகுப்பில் இவ்வாறு எனது சுய ஆய்வு மற்றும் தொழில் பற்றிய ஆய்வை நான் செய்யவில்லை... இது மிகவும் அற்புதம் எனது தொழிலில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என அறிந்துகொள்ள இப்பயிற்சி எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது நன்றி வாழ்க வளமுடன்
BALACHANDER K L
JEWELLERY, ERODE
பண்ணாரியில் பக்தியுடன் துவங்கிய பயணம்... ரோஜா மலர்கள் உடன் இனிதே வரவேற்பு பெற்றது... நமது சமுதாயத்தில் பல தொழில்கள் செய்யும் பல புதிய முகங்களை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்... அந்த உறவுகளுடன் உறவை வளர்த்துக்கொள்ள அளவளாவியது மகிழ்ச்சி... மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த இரண்டு நாள் பயிற்சி முகாம்... நமது வேட்டுவ கவுண்டர் சமுதாயத்தில் எனக்கு இது புதிய அனுபவமாக இருந்தது... சிறு சிறு தொழில் செய்பவர்கள் முதல் கோடிகளில் முதலீடு செய்து தொழில் செய்பவர்கள் வரை அனைவரையும் ஒருங்கிணைத்து அவர்களோடு இணைந்து பயணித்தது மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள்
சுப்ரமணி
SafeGen, Namakkal
தொழில் சார்ந்த எளிய பயிற்சி முறை தோல்வியை எவ்வாறு வெற்றியாக மாற்றுவது என்ற வித்தையை கற்றுக் கொடுத்த பயிற்சி வகுப்பு... பயிற்சி நடந்த இடம் சூழ்நிலை மிகவும் அருமை ஒவ்வொரு நமது வேட்டுவக் கவுண்டர் தொழில் முனைவோர் ஒவ்வொருவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டிய ஒரு பயிற்சி வகுப்பு எனது உள்ளார்ந்த பாராட்டுக்கள் நன்றி
சுந்தரமூர்த்தி
MOORTHY COOLOORS
எனது தவறுகளை (பலம் / பலவீனம் ) ஆணித்தரமாக என் மனதில் பதியுமாறு என்னை வைத்து எனக்கே புரிய வைத்தது ...உறவுகளின் மனதில் புதிய எண்ணங்களை விதைத்தது... வணிகத்தில் ஆர்வம் ஏற்படுத்தியது ...சிரிக்க வைத்து சிந்திக்க வைத்தது... எக்சல்லெண்ட் ஒவ்வொரு நிமிடமும் பயனுள்ள அறிவு.. நன்றி... ரமேஷ் மாமா ஒரு மினி நூலகம் ... உங்க மூளை இரண்டு கிலோ வா...? நமது வேட்டுவ கவுண்டர் சமுதாய வளர்ச்சி நிச்சயம்... நல்ல வருங்காலம் நமக்கு... மிக்க நன்றி
பொறியாளர் சிவசாமி நடராஜ்
THAAI DESIGNERS, சத்தியமங்கலம்
சொந்தங்களின் ஊக்குவிப்பு தொழிலில் பல வழிமுறைகளை கற்றுக் கொண்டது தொழில் சார்ந்த விழிப்புணர்வை மற்றவர்களின் உதவியோடு கொண்டுவந்தது மற்றும் விளையாட்டு மூலம் எளிதாக வணிக உத்திகளைப் கற்றுக்கொண்டது பலரின் மனதில் உள்ள குழப்பங்களுக்கு தீர்வு காண ஆகச் சிறந்த பயிற்சியாக இந்த இரண்டு நாள் பயிற்சி முகாம் இருந்தது முதலில் நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை நான் கற்றுக்கொண்டேன் நன்றி விஜி பிசினஸ் டைக்கூன்ஸ்
கௌரிசங்கர்
SRI SELVAVINAYAGAA FINANCE, வெப்படை
Very Wonderful Activity done and absorb by that implement steps-in to my business, We proud our Vettuva Gounder Community unity to do this VG Business Tycoons Present Tycoon Inside 2 Day Training Program its Great Success and the Success will continue all our Business Fraternity .. Thanks
Mukundan
Shiva Washing Center
டைகூன் இன்சைடு 2.0 பயிற்சியில் அனைவரும் தங்கள் தொழில் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டது அனைவருக்கும் ஒரு புதிய உந்து சக்தியை கொடுத்தது... இந்த பயிற்சி ஒவ்வொரு தொழில் முனைவோர் அனைவருக்கும் ஒரு தெளிவான விரிவான வழிமுறைகளை கற்றுக் கொடுத்துள்ளது ... நமது வேட்டுவ கவுண்டர் சமுதாய உறவுகள் யார் யார் என்ன என்ன தொழில் செய்கிறார்கள் மற்றும் அவர்களுக்கு நாமும் நாம் அவர்களுக்கும் எப்படி தொழில்முறையில் உதவலாம் மேம்படலாம் என்பதை தெளிவாக விளக்கியது. நன்றி
சுப்புரத்தினம்
GOLDEN GEARS
Superb … Keep it up… Please continue this Service with more … Innovative Way … We would like to render all available services..
Boopathy Raja A
Captain, Sri Aadav Vidhyalaya
It's very Classic Experience … in the last Two Days 2003 My experience like best way should gather. So the Fear Shyness not speak 30 years ambition is there. That ambition will achieve. Discipline and Punctuality very important learning my self, Education not set to increase your business.. Wonderful Experience with Mr. Ponnusamy .. Thanks VG Business Tycoons , And Tycoon Inside 2.0
S. THANKGAVEL
BIO TECH, ERODE
விஜி பிசினஸ் டைக்கூன்ஸ் பயிற்சி அனுபவம் மிகவும் புதிதாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது வாழ்க்கைக்கு தேவையான பயனுள்ள விஷயத்தை கற்றுக் கொண்டேன் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் ஏற்பட்டுள்ளது எனது கூச்ச சுபாவம் தற்போது குறைந்துள்ளது இனி வரும் காலங்களில் ஒவ்வொரு பயிற்சியிலும் கலந்து கொண்டு என்னை மெருகூட்டுவேன் .. வாழ்த்துக்கள் வேட்டுவக் கவுண்டர் வணிக மேம்பாட்டு அமைப்பு
பிரவீன்
MOORTHY COOLOORS
தற்போது நிம்மதியான மனநிலை, நமது உறவுகளின் வணிக ஒற்றுமை உணர்வு ஏற்பட உண்மையில் இந்த பயிற்சி ஒரு காரணமாக இருந்தது மகிழ்ச்சி. பயிற்சியில் கலந்து கொண்டதில் பெருமையடைகிறேன்.. டைக்கூன் இன்சைட் ஒருங்கிணைத்த, பயிற்சியளித்த அனைவரும் மிகச்சிறப்பாக செய்தனர் நன்றி .
கோபி
புகைப்படக் கலைஞன், ஈரோடு